Posts

Showing posts with the label பெண்மை-----மகாகவி பாரதி

பெண்மை-----மகாகவி பாரதி

பெண்மை #1 பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா பெண்மை வெல்க என்று கூத்திடுவோமடா தண்மை இன்பம் நல் புண்ணியம் சேர்ந்தன தாயின் பெயரும் சதி என்ற நாமமும் #2 அன்பு வாழ்க என்று அமைதியில் ஆடுவோம் ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம் துன்பம் தீர்வது பெண்மையினாலடா சூரப் பிள்ளைகள் தாய் என்று போற்றுவோம் #3 வலிமை சேர்ப்பது தாய் முலைப் பாலடா மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் கலி அழிப்பது பெண்கள் அறமடா கைகள் கோத்துக் களித்து நின்று ஆடுவோம் #4 பெண்ணறத்தினை ஆண்மக்கள் வீரம்தான் பேணுமாயில் பிறகு ஒரு தாழ்வு இல்லை கண்ணைக் காக்கும் இரண்டு இமை போலவே காதல் இன்பத்தைக் காத்திடுவோமடா #5 சக்தி என்ற மதுவை உண்போமடா தாளம்கொட்டித் திசைகள் அதிரவே ஒத்து இயல்வதொர் பாட்டும் குழல்களும் ஊர் வியக்கக் களித்து நின்று ஆடுவோம் #6 உயிரைக் காக்கும் உயிரினைச் சேர்த்திடும் உயிரினுக்கு உயிராய் இன்பம் ஆகிடும் உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா ஊது கொம்புகள் ஆடு களிகொண்டே #7 போற்றி தாய் என்று தோள் கொட்டி ஆடுவீர் புகழ்ச்சி கூறுவீர் காதல்கிளிகட்கே நூற்றிரண்டு மலைகளைச் சாடுவோம் நுண் இடைப் பெண் ஒருத்தி பணியிலே #8 போற்றி தாய் என்று தாளங்கள் கொட...