Posts

Showing posts with the label வாழ்க்கை

வாழ்வின் சுவை!

Image
வாழ்வு என்பது எவ்வளவு உண்மையோ அவ்வாறே மரணமும் சத்தியமானது. எல்லா உடல்களும் மரணத்தின் சுவையை சுவைத்தே தீருகின்றன. “ஒவ்வொரு உயிரும் மரணத்தைச் சுவைக்க வேண்டியதாய் இருக்கின்றது” சுவை என்றால் என்ன? இனிப்பு, கசப்பு, சிலபோது உவர்ப்பு, இந்த ருசிகளையே நாம் சுவை என்கிறோம். எனவே மரணம் சிலருக்கு இனிப்பாக இருக்கலாம். சிலருக்குக் கசப்பாக இருக்கலாம். வேறுசிலருக்கு உவர்ப்பாகவும் இருக்கலாம். வாழ்வு எவ்வாறு இருந்தது என்பதன் அடிப்படையில்தான் மரணத்தின் சுவையும் அமையும். சுவை எவ்வாறு இருந்தாலும் வாழ்வின் இறுதி முடிவல்ல மரணம். மாறாக வாழ்வின் தொடர்ச்சிதான் மரணம். மறுமை வாழ்வின் விசாலமான கதவுகளை திறந்து தருவதுதான் மரணம். மரணத்துக்கு வரம்புகள் கிடையாது. சிறியவர், பெரியவர் என்ற வேறுபாடோ, ஆண்-பெண் என்ற பாகுபாடோ கிடையாது. மரணம் வந்துவிட்டால் அனைத்தையும் விட்டுவிட்டுச் சென்று விடவேண்டியதுதான். நம்முடைய மரணத்துக்காக உலகம் தவித்துப்போகும் என்பதோ, உலகமே அழும் என்பதோ கிடையாது. நமக்காக அழும் ஒருசிலர்கூட கொஞ்ச நாட்கள்தான் அழுவார்கள். குறிப்பிட்ட காலத்திற்குப் பின் நமக்காகக் கண்ணீர் சிந்தவோ, நம்மைக் குறித்து நினைக்கவோகூட...

மனம் பாதி! மருந்து பாதி!!

*உங்கள் மூளையே சக்தி வாய்ந்த மருந்து! 'ப்ளாசிபோ' ரகசியத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!* Placebo Effect என்பது எந்த மாத்திரை, மருந்தும் இல்லாமல் நோயினை குணப்படுத்தும் ஒரு செயலாகும். அது எப்படி சாத்தியம் என்றுதானே கேட்கிறீர்கள்… வாருங்கள் விரிவாக பார்ப்போம். நோயை தீர்க்கும் சக்தி, மாத்திரைகளிலோ மருந்துகளிலோ மட்டுமில்லை, நம் மனதின் நம்பிக்கையிலும் உள்ளது என்றால் நம்புவீர்களா? நம் மூளையே ஒரு சக்திவாய்ந்த மருந்தாக மாறி, உடலின் வலிகளையும் சோர்வுகளையும் விரட்டும் இந்த ரகசிய நிகழ்வுதான் 'ப்ளாசிபோ விளைவு'. இது வெறும் கற்பனை அல்ல; இது நம்பிக்கை, எதிர்பார்ப்பு மற்றும் நரம்பியல் வேதியியல் ஆகியவற்றின் கூட்டுச்செயலாகும். மனதின் இந்த மகத்தான சக்தி எப்படி வேலை செய்கிறது, எந்தெந்த நோய்களுக்கு இது பலன் அளிக்கும் என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். உங்கள் மனம் ஒரு சக்திவாய்ந்த குணப்படுத்தும் மருந்தாக மாற முடியும். உங்கள் மூளை, ஒரு போலி சிகிச்சையை உண்மையான சிகிச்சை என்று உங்களை நம்ப வைத்து, அதன் மூலம் உங்கள் நோயை குணப்படுத்துகிறது. இதுவே ப்ளாசிபோ விளைவு (Placebo Effect) என்று ...