தொலைபேசி
அலெக்சாண்டர் கிரகம்பெல்!!! இன்று உலகத்தின் எந்த மூலைக்கும் யாருடனும் தொடர்பு கொள்ள முடிகிறது என்றால் அதற்கு காரணம், டெலிபோன் என்ற சாதனம். இதற்கு முதலில் அடித்தளம் இட்ட அறிவியல் மேதை, அலெக்சாண்டர் கிரகம்பெல். அலெக்சாண்டர் கிரகாம்பெல் வாழ்க்கை வரலாறு:- கிரகாம்பெல் 1847 மார்ச் 3ல், ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க்கில் பிறந்தார். இவரது அப்பா சிறந்த எழுத்தாளர். பேச மற்றும் காது கேட்காத மக்களுக்கு கற்பிப்பது தொடர்பான புத்தகங்களை எழுதியவர். கிரகாம்பெல், எடின்பர்க்கில் உள்ள ராயல் உயர்நிலைப்பள்ளியில் படித்தார். 14 ம் வயதில் பட்டம் பெற்றார். இவர் சில ஆண்டுகள் மட்டுமே முறையான கல்வி கற்ற போதிலும், இவருடைய குடும்பத்தினர் இவருக்கு சிறந்த கல்வியை கற்பித்தனர். இவர் தாமாகவும் உயர்ந்த கல்வியை கற்றுக்கொண்டார். இவருடைய தந்தை, குரல் உறுப்பு பயிற்சியிலும், பேச்சுத் திருத்த முறையிலும், செவிடர்களுக்கு கல்வி கற்பிப்பதிலும் வல்லுனராகத் திகழ்ந்தார். எனவே குரல் ஒலிகளை மீண்டும் உருவாக்கிக் காட்டுவதில் இவருக்கு இயல்பாகவே ஆர்வம் எழுந்தது. பின் எல்ஜினில் உள்ள வெஸ்டன் ஹவுஸ் அகாடமி கல்லூரியில் ஒரு ஆண்டு ஆசிரியராக இருந்தா...