Posts
வாழ்வின் சுவை!
- Get link
- X
- Other Apps
வாழ்வு என்பது எவ்வளவு உண்மையோ அவ்வாறே மரணமும் சத்தியமானது. எல்லா உடல்களும் மரணத்தின் சுவையை சுவைத்தே தீருகின்றன. “ஒவ்வொரு உயிரும் மரணத்தைச் சுவைக்க வேண்டியதாய் இருக்கின்றது” சுவை என்றால் என்ன? இனிப்பு, கசப்பு, சிலபோது உவர்ப்பு, இந்த ருசிகளையே நாம் சுவை என்கிறோம். எனவே மரணம் சிலருக்கு இனிப்பாக இருக்கலாம். சிலருக்குக் கசப்பாக இருக்கலாம். வேறுசிலருக்கு உவர்ப்பாகவும் இருக்கலாம். வாழ்வு எவ்வாறு இருந்தது என்பதன் அடிப்படையில்தான் மரணத்தின் சுவையும் அமையும். சுவை எவ்வாறு இருந்தாலும் வாழ்வின் இறுதி முடிவல்ல மரணம். மாறாக வாழ்வின் தொடர்ச்சிதான் மரணம். மறுமை வாழ்வின் விசாலமான கதவுகளை திறந்து தருவதுதான் மரணம். மரணத்துக்கு வரம்புகள் கிடையாது. சிறியவர், பெரியவர் என்ற வேறுபாடோ, ஆண்-பெண் என்ற பாகுபாடோ கிடையாது. மரணம் வந்துவிட்டால் அனைத்தையும் விட்டுவிட்டுச் சென்று விடவேண்டியதுதான். நம்முடைய மரணத்துக்காக உலகம் தவித்துப்போகும் என்பதோ, உலகமே அழும் என்பதோ கிடையாது. நமக்காக அழும் ஒருசிலர்கூட கொஞ்ச நாட்கள்தான் அழுவார்கள். குறிப்பிட்ட காலத்திற்குப் பின் நமக்காகக் கண்ணீர் சிந்தவோ, நம்மைக் குறித்து நினைக்கவோகூட...
உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது?
- Get link
- X
- Other Apps
உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது? தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய பொருள் எது என்பதே அவர் கேள்வி ‘மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம் அனைவரையும் மகிழ்விக்கும் பொருளை அரண்மனையில் இருக்கும் கொலுமண்டபத்தில் வைத்து விடுங்கள், யாருடைய பொருள் அரசருடைய சந்தேகத்திற்கு சரியான விடை தருகிறதோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு’ என அறிவிக்கப்பட்டது. மக்களும் யோசித்து, அவர்களுக்கு தெரிந்து மகிழ்ச்சியை தரும் பொருட்கள் எவையோ அவற்றை கொண்டு வந்து அரண்மனை கொலு மண்டபத்தில் வைத்துவிட்டு ஆயிரம் பொற்காசுகள் பரிசுக்காக காத்திருந்தார்கள். மறுநாள், மன்னர் ராஜராஜ சோழர் கொலு மண்டபத்திற்கு வந்து பார்த்தார். மக்கள் வைத்த பொருட்கள் மண்டபத்தில் நிரம்பி இருந்தது. ஒவ்வொரு பொருட்களாக அரசர் பார்த்துக் கொண்டே வந்தார். முதலில், சிறிய அளவு பொன் இருந்தது. அதன் கீழே, ‘செல்வமே மகிழ்ச்சி தரக்கூடியது’ என எழுதப்பட்டிருந்தது. ஆனால், ‘செல்வந்தர்களுக்கும், நோயாளிகளுக்கும் செல்வம் எப்படி மகிழ்ச்சியை தரும்?’ அதனால் இது ச...
வெற்றிக்கு வழி!
- Get link
- X
- Other Apps
வெற்றிக்கு வழி! - ஒரு மகாபாரதக் கதை எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்; சந்தர்ப்பங்களை சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் கோட்டை விட்டவர்கள், எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும் பிரகாசிக்க முடியாது. மகாபாரதம் இது குறித்து அற்புதமாக விளக்கியிருக்கிறது! பாண்டவர்களும் கௌரவர்களும் துரோணரிடம் வில்வித்தை கற்று வந்தனர். பாண்டவர்களின் திறமையே எங்கும் பளிச்சிட்டது. அதனால், துரியோதனனுக்குள் பொறாமைத் தீ, கனன்று கொண்டே இருந்தது. வெற்றிக்கு வழி! ஒருநாள், பீஷ்மரிடம் வந்தவன், ‘தாத்தா! வில் வித்தை கற்றுத் தரும் துரோணர், அனைவரையும் சரிசமமாக பாவிப்பதில்லை. பாண்டவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் எங்களுக்கு வேறு மாதிரியாகவும் பாடம் நடத்துகிறார். இதுபற்றி அவரிடம் கேளுங்கள்…’ என்று வற்புறுத்தினான். வேறு வழியின்றி துரோணரை சந்தித்த பீஷ்மர், தான் வந்த நோக்கத்தை நாசூக்காகத் தெரிவித்தார். உடனே துரோணர், ‘பிதாமகரே! நாளைய தலைமுறை இடையே எந்த வேறுபாடும் காட்டுவதில்லை! அனைவரையும் ஒன்றாகவே எண்ணி போதிக்கிறேன். என்ன தான் மழை பெய்தாலும் பாத்திரத்துக்கு தக்க படிதானே நீர் நிரம்பும்! அதற்காக மழையை குற்றம் சாட்ட முடி...
மனம் பாதி! மருந்து பாதி!!
- Get link
- X
- Other Apps
*உங்கள் மூளையே சக்தி வாய்ந்த மருந்து! 'ப்ளாசிபோ' ரகசியத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!* Placebo Effect என்பது எந்த மாத்திரை, மருந்தும் இல்லாமல் நோயினை குணப்படுத்தும் ஒரு செயலாகும். அது எப்படி சாத்தியம் என்றுதானே கேட்கிறீர்கள்… வாருங்கள் விரிவாக பார்ப்போம். நோயை தீர்க்கும் சக்தி, மாத்திரைகளிலோ மருந்துகளிலோ மட்டுமில்லை, நம் மனதின் நம்பிக்கையிலும் உள்ளது என்றால் நம்புவீர்களா? நம் மூளையே ஒரு சக்திவாய்ந்த மருந்தாக மாறி, உடலின் வலிகளையும் சோர்வுகளையும் விரட்டும் இந்த ரகசிய நிகழ்வுதான் 'ப்ளாசிபோ விளைவு'. இது வெறும் கற்பனை அல்ல; இது நம்பிக்கை, எதிர்பார்ப்பு மற்றும் நரம்பியல் வேதியியல் ஆகியவற்றின் கூட்டுச்செயலாகும். மனதின் இந்த மகத்தான சக்தி எப்படி வேலை செய்கிறது, எந்தெந்த நோய்களுக்கு இது பலன் அளிக்கும் என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். உங்கள் மனம் ஒரு சக்திவாய்ந்த குணப்படுத்தும் மருந்தாக மாற முடியும். உங்கள் மூளை, ஒரு போலி சிகிச்சையை உண்மையான சிகிச்சை என்று உங்களை நம்ப வைத்து, அதன் மூலம் உங்கள் நோயை குணப்படுத்துகிறது. இதுவே ப்ளாசிபோ விளைவு (Placebo Effect) என்று ...
எதுவும் நடக்கும்!!
- Get link
- X
- Other Apps
எதுவும் நடக்கும் - படித்ததில் சுவைத்த சிந்தனைக் கதை ஒரு வீட்டில் ஒரு எலி தனது இரவு நேர இரையை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது வளையை விட்டு மெள்ள தலையை உயர்த்திப் பார்த்தது. வீட்டின் எஜமானனும், எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். ‘ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள் தான் உள்ளே இருக்கும்!’ என்று ஆவலோடு பார்த்தது அந்த எலி. அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி அதைப் பார்த்ததும் எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது. உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது ‘பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார் எனக்கு பயமாக இருக்கிறது’ என்று. அதைக் கேட்ட கோழி விட்டேற்றியாகச் சொன்னது ‘உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம் தான். நல்லவேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை’ என்று. ‘உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது வான்கோழியும் அதே பதிலைச் சொல்லியதோடு ‘நான் எலிப்பொறியை யெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்’ என்றது. மனம் நொந்த எலி அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதே...
9th std Social Science All materials TM&EM
- Get link
- X
- Other Apps
TM Guide TM Guide TM Guide 2&5 marks TM Maps TM Maps TM Guide. Indiran TM Maps & Workbook. Indiran TM Mind maps TM Fill ups Question Bank TM 1 mark Q&A / Question Bank TM PPTs Online Test Links Online Test Links Important Questions 2&5 marks Annual Question Papers III MTT Question paers Half Yearly Question papers TM I MTT important questions June Month Lessons GIST TM & EM TM Ganga Guide old EM Ganga Guide old EM Guide EM Maps EM Guide 2&5 Marks / Maps EM Mind maps EM 1 Marks Q&A EM 1 Marks Q&A EM 1 Mark Q&A / Question Bank