சிந்தனை

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
இன்றைய சிந்தனை

"#வெற்றியின்_உளவியல்..."

அனைவருமே தான் வெற்றிபெற வேண்டும் என்றுதான் மேலோட்டமாக நினைக்கிறார்கள் ஆனால் அவர்களின் மனதிற்குள் 'வெற்றி என்பது அவ்வளவு சாதாரணமானது இல்லை' என்றே பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். 

வெற்றி என்பது இயல்பான ஒன்றுதான் என்கிற உண்மையை பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் அவர்கள் வெற்றிபெற முடியாமல் போவதற்கும், தன்னால் வெற்றிபெறுவே முடியாது என்று அவர்களே நம்புவதற்குமான காரணம். 

உண்மையில் வெற்றி பெறுவது இயல்பான ஒன்றுதான் ஆனால் நம்முடைய எதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மை, பயம் போன்றவை தான் வெற்றியை மிகவும் கடினமானதாகக் காட்டுகிறது. அதனால்தான் வெற்றி என்பது யாரோ சிலருக்கு மட்டுமே சொந்தமானது என்று நினைக்கிறோம். 

எதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மை, பயம் போன்றவற்றை விலக்கி வைத்துவிட்டுப் பாருங்கள், வெற்றி பெறுவது இயல்பான ஒன்று என்பது புரியும். 

எறும்பு, யானை, சிங்கம், புலி,  பறவைகள் என அனைத்து உயிர்களும் தனது இயல்பில் வெற்றிகரமான வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறது. ஆனால் பகுத்தறிவு உடையவர்கள் என்று பெருமைப்படும் நாமோ? சாதாரணமான ஒரு வாழ்க்கையை வாழவே சிரமப்பட்டு வருகிறோம். 

நன்றாக சிந்தித்துப் பாருங்கள், 

* என்னால் வெற்றிபெற முடியாது, எனக்கு திறமை இல்லை, அழகு இல்லை, அறிவு இல்லை என்பது போன்ற எதிர்மறை எண்ணங்கள் மனிதனைத் தவிர மற்ற உயிர்களுக்கு உண்டா? 

* தாழ்வு மனப்பான்மை மனிதனைத் தவிர வேறு எந்த உயிருக்காவது உண்டா? 

* இது என்னால் முடியுமா? இல்லையா? என்கிற பயம் மனிதனைத் தவிர வேறு ஏதேனும் உயிருக்கு உள்ளதா? 

மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த பயம்? மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த எதிர்மறை எண்ணங்கள்? மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த தாழ்வு மனப்பான்மை? 

ஏனென்றால், 

* மனிதன் மட்டுமே தன்னுடைய ஒரு அறிவைக் கூட பயன்படுத்துவது இல்லை. 

* மனிதன் மட்டுமே பிறருடன் தன்னை ஒப்பிட்டு வாழ்கிறான்.

* மனிதன் மட்டுமே விளம்பரங்கள், நாடகங்கள், படங்கள் வழியாக தனக்குத் தேவையற்ற பலவற்றையும்  அளவுக்கு அதிகமாகவே எடுத்துக் கொள்கிறார்கள். 

* மனிதன் மட்டுமே தன் வாழ்க்கையை வாழாமல், பிறரைப் போல வாழ்வதிலேயே தன் வாழ்க்கையை வீணாக்கி வருகிறார்கள். 

இதற்கு என்னதான் தீர்வு...?

உங்களைப் பற்றி நீங்களே புரிந்து கொள்ளுங்கள். உங்கள் எண்ணம், மனம், அறிவு, உடல் என உங்களைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். 

உங்களைப் பற்றி உங்களால் எந்த அளவிற்கு புரிந்துகொள்ள முடிகிறதோ அந்த அளவிற்கு உங்களால் சாதாரணமாக வெற்றிபெற முடியும்.‌ 

உங்களைப் பற்றி நீங்கள் சிந்தித்து தெளிவு பெறுங்கள் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக, அற்புதமாக உங்களால் வாழ முடியும். 

நல்லதை நினைப்போம்
வளமோடு வாழ்வோம்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
இன்றைய நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்

Comments

Popular posts from this blog

X std SS PPT Collections TM & EM

6-10 SOCIAL SCIENCE GUIDES