ஆசிரியர் இனம்!!!
ஆசிரியர் இனத்தைப்பற்றி ஒரு மருத்துவரின் உருக்கமான பதிவு.. *ஆசான் பகிர்வு....* சமீபத்தில் ஒரு அரசு பள்ளி ஆசிரியை என்னை சந்திக்க வந்திருந்தார்.* *தலை சுற்றல் தான் பிரதான அறிகுறி!* காலையில் உணவு தாமதமானதால் ரத்த சர்க்கரை அளவுகள் குறைந்து அதனால் சர்க்கரை குறைந்திருக்கும் என்று அனுமானித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் பணிமூப்படைவதற்கு (Retirement) இன்னும் சற்றேறக்குறைய இரண்டு வருடங்கள் மட்டுமே இருக்கின்றன போலும்.. நான் சில ரத்த பரிசோதனைகள் எழுதிக்கொடுத்து நாளை பரிசோதனை செய்து விட்டு மீண்டும் சந்திப்போம் என்று கூற, அவர் "சார் நாளைக்கு என்னால டெஸ்ட் எடுக்க முடியாது. பசங்களுக்கு பரீட்சை இருக்கு. நான் இல்லனா ஒழுங்கா எழுதமாட்டானுங்க" " உங்களுக்கு எத்தனை பசங்க மா..?" "ஐம்பத்தி ஏழு பசங்க சார்" "என்ன சொல்றீங்க?" "நான் டெண்த்க்கு அறிவியல் எடுக்கிறேன் சார். என் க்ளாஸ் பசங்கள தான் சொன்னேன்" *பின் முதுகுத்தண்டில் இருந்து ஒரு அனிச்சை உணர்ச்சி நரம்புகளில் விருட்டென பாய மயிர்கள் கூச்செரிவதை இதை எழுதும் போது கூட உணர்கிறேன்.* "டீச்சர்... சனிக...