சிந்தனை
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 இன்றைய சிந்தனை "#வெற்றியின்_உளவியல்..." அனைவருமே தான் வெற்றிபெற வேண்டும் என்றுதான் மேலோட்டமாக நினைக்கிறார்கள் ஆனால் அவர்களின் மனதிற்குள் 'வெற்றி என்பது அவ்வளவு சாதாரணமானது இல்லை' என்றே பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். வெற்றி என்பது இயல்பான ஒன்றுதான் என்கிற உண்மையை பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் அவர்கள் வெற்றிபெற முடியாமல் போவதற்கும், தன்னால் வெற்றிபெறுவே முடியாது என்று அவர்களே நம்புவதற்குமான காரணம். உண்மையில் வெற்றி பெறுவது இயல்பான ஒன்றுதான் ஆனால் நம்முடைய எதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மை, பயம் போன்றவை தான் வெற்றியை மிகவும் கடினமானதாகக் காட்டுகிறது. அதனால்தான் வெற்றி என்பது யாரோ சிலருக்கு மட்டுமே சொந்தமானது என்று நினைக்கிறோம். எதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மை, பயம் போன்றவற்றை விலக்கி வைத்துவிட்டுப் பாருங்கள், வெற்றி பெறுவது இயல்பான ஒன்று என்பது புரியும். எறும்பு, யானை, சிங்கம், புலி, பறவைகள் என அனைத்து உயிர்களும் தனது இயல்பில் வெற்றிகரமான வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறது. ஆனால் பகுத்தறிவு உடையவர்கள் என்று பெர...