வார்த்தைகள் வலிமை மிக்கவை!!

நேர்மறையான சொற்கள் என்றுமே
இனிமை, வலிமை....

பள்ளியிலிருந்து திரும்பிய இளம் சிறுவன் தன் வகுப்பு டீச்சர் கொடுத்த ஒரு கடிதத்தை தன் அம்மாவிடம் கொடுத்தான். அந்த கடிதத்தை படித்தவுடன் அவன் அம்மாவின் கண்களில் கண்ணீர்  ஆறாக பெருகியது.

"என்னம்மா? என்ன இருக்கிறது கடிதத்தில்? நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா?" என்று மழலைதனமாக கேட்டான். "இல்லை" என்று கூறி தன் நடுங்கும் 
குரலில் படித்தாள்.

"உங்கள் மகன் பெரிய Genius. அவனுக்கு கற்று தரும் அளவுக்கு எங்கள் பள்ளியில் திறமையான ஆசிரியர்கள் இல்லை. எனவே நீங்களே உங்கள் பையனுக்கு வீட்டில் சொல்லி கொடுங்கள்."

பையனுக்கு ஒரே குழப்பம். 
ஒன்றும் புரியவில்லை. மறுநாள் அம்மா தன் மகனை பள்ளிக்கு அனுப்பாமல், அவரே தன் மகனுக்கு சொல்லி கொடுக்க ஆரம்பித்தார்.

அந்த சிறு பையன் Thomas Edison. அவன் அம்மா பெயர் Nancy Edison. பல வருடங்கள் ஓடியது. தாமஸ் ஆல்வா எடிஸன் தன் வாழ்வில் பெரும் சாதனைகள் புரிந்தார். பல கண்டுபிடிப்புகள் . உலகமே அவரை பாராட்டியது. அவரதுஅம்மாவும் காலமானார்.

அவரது அம்மா இறந்த பிறகு, ஒரு நாள் அம்மாவின் அலமாரியில் எதையோ தேடிய போது, பள்ளியில் அனுப்பி இருந்த கடிதம் கண்ணில் பட்டது. பிரித்து படித்தவர் அப்படியே உறைந்து போனார்.

"உங்கள் பையன் Mentally ill.. மனநிலை சரியில்லை. பள்ளியில் எங்களால் அவனை வைத்து கொண்டிருக்க முடியாது. பள்ளியிலிருந்து நீக்குகிறோம்".

தாமஸ் ஆல்வா எடிசன், அவரது அன்னையின் சமயோசதித்தால் தன் வாழ்வை காப்பாற்றி, தனக்கு வளமான எதிர்காலத்தை அமைத்து கொடுத்து இருக்கிறார் என்று உணர்ந்தார்.

பள்ளியில் அனுப்பி இருந்த கடிதத்தை, அப்படியே படித்திருந்தால், தன் எதிர்காலமே சிதைந்திருக்கும் என்று புரிந்தது. தன் அன்னையின் தியாகத்தை உணர்ந்து, வெகு நேரம் உறைந்து போய் அழுதார்.

பின் தன் டைரியில் கீழ்கண்டவாறு எழுதினார் :

Thomas Edition was a mentally ill child whose mother turned him into genius of this century.

நமக்கும் இது ஒரு பாடம்..

தவறான எதிர்மறையான வார்த்தைகள் ஒருவரது வாழ்வையே அழித்து விடும். நல்ல நேர்மறையான  உற்சாகமூட்டும் சொற்கள் நம்மை சுற்றியுள்ள நண்பர்கள், உறவுகள் எல்லோருக்கும் உத்வேகம் கொடுக்கும். அவர்கள் வாழ்வையே மகிழ்ச்சி ஆக்கும்.

எப்பொழுதும் உற்சாகமூட்டும், நல்ல சொற்களால் நம்மை சுற்றி நல்ல அன்பு வட்டத்தை உருவாக்குவோம்.
பலரது தாழ்வு மனப்பான்மையை
மாற்றுவோம். வளமான வாழ்விற்கு வழிவகுப்போம்.

Comments

Popular posts from this blog

X std SS PPT Collections TM & EM

6-10 SOCIAL SCIENCE GUIDES