Posts

Showing posts from May, 2023

தோல்வி ஏன்???

.*ஆசிரியர்கள் எங்கே தோற்றுப்போகின்றனர்?* 📝ஓர் ஆசிரியருக்கு பிரச்சினை என்று வரும்பொழுது, அவர் தொடக்கப்பள்ளியா? ஆரம்பப் பள்ளியா? கூட்டணியா? SSTA? மன்றமா? எனப் பார்த்து பிரிந்து நிற்கும்பொழுது ஆசிரியர்கள் தோற்றுப்போகின்றனர். 📝ஆசிரியர் இனத்திற்கு ஒரு பிரச்சினை என்னும்பொழுது, இடைநிலை ஆசிரியருக்கா? பட்டதாரி ஆசிரியருக்கா? முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கா? எனப் பாகுபாடு பார்க்கும்பொழுது ஆசிரியர்கள் தோற்றுப்போகின்றனர்.. 📝ஓர் ஆசிரியர் தவறு செய்தால்,  அவரைக் கண்டிப்பதையோ, தண்டிப்பதையோ தடுக்க சங்கம் என்ற போர்வையில் முன்னே ஒரு சங்கம் முன்னே  வரும்பொழுது ஆசிரியர்கள் தோற்றுப்போகின்றனர். 📝தவறே செய்யாத ஆசிரியர்கள் பாதிக்கப்படும்பொழுது, நமக்கேன் வம்பு என பிற ஆசிரியர்கள் ஒதுங்கி நிற்கும்பொழுது தோற்றுப்போகின்றனர். 📝ஏதோ ஒரு சங்கத்தில் இணைந்துவிட்டால் அவர்கள் தவறு செய்யும்பொழுதும்  குரல் எழுப்பாமல் எப்பொழுது அமைதியாய் இருக்கத் தொடங்கினார்களோ அன்றே ஆசிரியர்கள் தோற்கத் தொடங்கிவிட்டனர் 📝ஏதோ ஒரு மூலையில் புயலோ, பூகம்பமோ என்றால் துடிக்கும் ஆசிரியர்கள், ஏதோ ஒரு பள்ளியில் ஆசிரியருக்குப் பிரச்சினை என்றால் மட்டும