Posts

Showing posts with the label மருத்துவம்

மருத்துவம்

உலகில் மருந்தகங்களில் கிடைக்காத அதி அற்புதமான மருந்துகள் உடற்பயிற்சி என்பதும் ஒரு மருத்துவம் விரதம் இருப்பதும் ஒரு மருத்துவம் இயற்கை உணவு உண்பதும் ஒரு மருத்துவம் சிரிப்பு என்பதும் ஒரு மருந்து நல்ல தூக்கம் என்பதும் ஒரு மருந்து பச்சைக் காய்கறிகள் உண்ணுவதும் ஒரு மருந்து சூரிய ஒளியும் ஒரு மருந்து ஒருவரிடம் அன்பாய் இருப்பதும் ஒரு மருத்துவம் நன்றி உணர்வோடு இருப்பதும் ஒரு மருத்துவம் தவறை மன்னிப்பதும் ஒரு மருத்துவம் இறைவ இறைவனை தொழுவதும் மருத்துவம் இறைவனை நினைப்பதும் துதிப்பதும் ஒரு மருத்துவம் மனதிற்கு பிடித்தமான பாடல் பாடுவதும் கேட்பதும் மற்றும் இசைக்கு நடனம் ஆடுவதும் ஒரு அற்புத மருத்துவம் " சரியாகச் சிந்திப்பதும், சரியான மனநிலையில் இருப்பதும் ஒரு மருத்துவம் நல்ல நண்பர்களுடன் இருப்பது ஒரு நல்ல மருத்துவம் இந்த மருந்துகளை போதுமான அளவு நாம் எடுத்துக் கொண்டால் மருந்தகங்களில் உள்ள மருந்துகள் நமக்கு அரிதாகவே தேவைப்படும். இயற்கையோடு பயணித்து இயற்கையில் துயில் கொள்வோம் வாழ்வென்ற வசந்தத்தில்...!